பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீரவை இன்று(14) மஹர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்தார்.
பின்னர், அவர் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
