முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதிவான் நீதிமன்றம் இன்று(04.08.2025) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணவீர, மஹர நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டில் போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விளக்கமறியல்
ஆனால், பிரசன்ன ரணவீர நீதிமன்றத்தில் சரணடையாமல் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்தார்.
பின்னர், பிரசன்ன ரணவீர கடந்த மே மாதம் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்துத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
