இலங்கை வங்கி தலைவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் பிரகதி வங்கி ஊழியர் சங்கம்(Video)
இலங்கை வங்கி தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு பொய்யானது என பிரகதி வங்கி ஊழியர்கள் இன்று(17) கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை வங்கி தலைவரின் சட்டத்திற்கு முரணான ஊழல் செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் அவரின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் சங்கத்தின் தோழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்தும் நேற்று முன்தினம்(15) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தினரால், இலங்கை வங்கியின் பிரதான கட்டடத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு டீ.எப்.சி.சி வங்கி, கொமர்சல் வங்கி மற்றும் ஏனைய வங்கியை சார்ந்தவர்களும் வருகை தந்து ஆதரவை வழங்கியிருந்தனர்.
பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கம்
இவ்வாறு இலங்கை வங்கியின் ஊழியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் முன்வைத்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் இலங்கை வங்கி தலைவர் எந்தவித குற்றங்களையும் செய்யவில்லை எனவும் மறுப்பு தெரிவித்தே இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் இலங்கை வங்கியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்கான முயற்சி எனவும் குறித்த போராட்டத்தில் அரசியல் பின்னணி காணப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.