யாழில் மாவட்ட ரீதியில் 3ஆவது இடம் பெற்று குணராசா பிரகாசன் சாதனை!
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு வணிகத்துறையில் தோற்றி 3ஏ சித்திகளை பெற்று குணராசா பிரகாசன் என்ற மாணவன் மாவட்ட ரீதியாக 3ஆவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை இளவாலை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், உயர்தர கல்வியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
அந்த மாணவன் தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் நினைப்பதுதான் நடக்கும் என்ற ரீதியில் எனது ஆசிரியர் தினமும் வகுப்புக்குள் வந்தவேளை சொல்லுவார், 3ஏ எடுப்போம் என பயிற்சி கொப்பியில் எழுதுங்கள் என்று. நானும் அவ்வாறு தினமும் எழுதுவேன். நான் கற்பதற்கு மிகவும் உகந்த சூழலாக எனது பாடசாலையை தெரிவு செய்தேன்.
அந்தவகையில் பெரும்பாலான கற்றல் நடவடிக்கையை பாடசாலையிலேயே முன்னெடுத்தேன்.
எனது இந்த நிலைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், பாடசாலை சமூகத்தினர், ஆசிரியர்கள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது எதிர்கால இலக்கு ஒரு வங்கி முகாமையாளராக வருவதே. எனவே அதனை நோக்கிய எனது பயணத்தை ஆரம்பிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |