ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே வழக்கில் கைதான பிரதீப் காரியவசத்திற்கு பிணை
முதலாம் இணைப்பு
ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்ட வழக்கில் இன்று(07) கைதான தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புதிய இணைப்பு
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் கைதுகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடைய சிரிலிய சவிய கணக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பான முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அவர் ஆணைக்குழுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இதே வழக்குக்காக தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசமும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam