“விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு வந்தாலும் மாற்றங்கள் எதுவும் நிகழப் போவதில்லை”கே.பாலகிருஷ்ணன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு வந்தாலும் மாற்றங்கள் நிகழப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இறுதி போரில் கொல்ப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான சான்றுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள் நிகழப் போவதில்லை
போர் முடிந்து 13 வருடங்கள் கழித்து ஏதோ ஓர் தேவைக்காக அவர் உயிருடன் இறுக்கிறார் என சொல்வது ஏற்புடையதாக இல்லை. அதை தான் பல தரப்பினர் கூறுகின்றனர்.
இதேவேளை அவர்கள் கூறுவது போன்று பிரபாகரன் உயிருடன் இப்போது மீண்டு வருவதால் பெரிய மாற்றங்கள் எதுவுமே நிகழப்போவதில்லை.
எனவே நாம் பார்க்க வேண்டியது இந்த மாதிரியான அறிவிப்புக்கள் என்ன விளைவை ஏற்படுத்த போகின்றது என்பது தான்.”என கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.
பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பழ.நெடுமாறனின் இந்த கருத்து தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
