விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் சகோதரர் கூறியது இதுவே! புலனாய்வுச் செய்தியாளர்(Video)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார், நலமுடன் விரைவில் வருவார் என்ற செய்தி கடந்த இரு நாட்களாக உலகை சுற்றிவந்து கொண்டிருக்கின்றன. பிரபாகரன் இருக்கின்றார் அல்லது இல்லை என்பதற்கு அப்பால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தலைவர் சார்ந்த படையினர் வாழ்ந்த, செயற்பட்ட பகுதிகளில் தற்போது இராணுவ கட்டமைப்பு மிக வேகமாக வேரூன்றி இருக்கின்றது என புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எனவே இவர்கள் காட்டும் பூச்சாண்டிகள் எமது பகுதிகளில் நடப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஒருபோதும் வரப்போவது இல்லை
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2010ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது அண்ணன், டென்மார்க்கில் இருக்கின்றார். இந்தியாவின் ஜூனியர் விகடன் தொலைபேசி வாயிலாக அவரை நேர்காணல் நடத்தியது.
அப்போது அவர் தெரிவித்த கருத்தும் அதேதான். அவர் அப்போதே கூறியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒருபோதும் மக்கள் முன் வரப்போவதில்லை. அதையேதான் நாங்களும் கூறுகின்றோம், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீண்டும் மக்களிடத்தில் ஒருபோதும் வரப் போவதில்லை என அரசியல் ஆய்வாளர் நிலாம்டின் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,





கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
