விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டு காணி விவகாரம்: மக்கள் கொடுத்த பதிலடி-செய்திகளின் தொகுப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் வீடு அமைந்திருந்த காணியினை பிரதேச மக்கள் இணைந்து சிரமதானம் மூலம் துப்பரவு பணிகளை இன்று முன்னெடுத்துள்ளனர்.
இந்த துப்பரவு பணி வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ள நிலையில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,குறித்த காணியினை துப்புரவு செய்து 22ஆம் திகதிக்கு முன் தமக்கு அறியத்தர வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அது தம்மால் கையேற்கப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல் சிவாஜிலிங்கம் தலைமையில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து சிரமதானம் மூலம் காணியில் துப்பரவு பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri