ஜனாதிபதித் தேர்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாசவின் விசேட அறிவிப்பு
புதிய இணைப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச கூறியுள்ளார்.
இலங்கையினதும், இலங்கை மக்களினதும் வெற்றியை முன்னிறுத்தியே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளின் செயற்பாடு
“உங்களது விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் எஞ்சியது துன்பம் மாத்திரமே.
உலகம் மாற்றமடைவதைப் பார்ப்பதற்கு விரும்பினால் அந்த மாற்றத்தை உங்களால் மாத்திரமே ஏற்படுத்தமுடியும்.” என தனது விசேட உரையில் அமைச்சர் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஒருவர் இன்று அல்லது இந்த வாரத்தில் பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அமைச்சர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தில் இவ்வாறு தனது பதவி விலகல் செய்ய உள்ளார் என கூறப்படுகின்றது.
இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை
தேர்தலுக்கான ஒழுங்கமைப்பு பணிகளை அவர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றியதன் பின்னர் அவர் தனது பதவி விலகல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அவர் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |