அமெரிக்காவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ (San Diego) நகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாறைகள் சரிந்து விழுந்து..
நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
🚨 #Earthquake 🚨
— ᴰᵃˢʳᵃᵗ ᴿᵃⁱ ᴹᵉᵍʰʷᵃʳ 🇧🇫 (@DasratRai) April 14, 2025
This one was biggg!!! Did anyone feel it. We got an alert but didn’t feel it, we are in Downey. But a 6.2 is strong. Happened today 4/14 at 10:08am. Hope everyone is ok. Epicenter San Diego County. #earthquake #UnitedStates pic.twitter.com/TmgohhZmfh
மேலும், சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதுடன், நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல நேபாள நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளதுடன், இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
