மின்வெட்டு நேரத்தில் ஏற்படும் மாற்றம்! வெளியான அறிவிப்பு
மின்வெட்டு நேரத்தில் எதிர்வரும் வார இறுதி மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்படும் மாற்றம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாரயிறுதியில் 1 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
என்ற போதும் நவம்பர் 14ஆம் திகதி 2 மணிநேர மின்வெட்டு நடைமுறையாகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு நடைமுறையாகும் விதம்
நவம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் Wஇற்கு மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை 1 மணி நேர மின்வெட்டு ஏற்படுத்தப்படும்.
நவம்பர் 14ஆம் திகதி குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் Wஇற்கு பகல் நேரத்தில் 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
