நாடு முழுவதும் நீண்ட நேர மின்தடை..! பாரியளவில் அதிகரிக்கப்படும் மின் கட்டணம் - பகிரங்க எச்சரிக்கை
நாடு முழுவதும் நீண்டநேர மின்தடை ஏற்படலாம் அல்லது ஒரு அலகு மின்சாரத்தின் விலை 90 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு மின்கட்டணங்கள் பாரியளவில் உயர்த்தப்படலாம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (15.02.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை நாடு பாரிய மின்சார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.
நிலக்கரி பற்றாக்குறை
இந்த ஆண்டில் 212 நாட்களுக்கு மட்டுமே போதுமான நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது. அந்த 212வது நாள் ஜூலை 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக செப்டெம்பர் நடுப்பகுதி வரை நிலக்கரியை இறக்க முடியாது.

இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் ஒன்றரை மாதங்களுக்கு மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும். இந்த நெருக்கடியால் நாடு முழுவதும் நீண்டநேர மின்தடை ஏற்படலாம்.
அல்லது ஒரு அலகு மின்சாரத்தின் விலை 90 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு, மின்கட்டணங்கள் பாரியளவில் உயர்த்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam