ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே அதிகாரச் சமர் : வெளிவந்த தகவல் (செய்திகளின் தொகுப்பு) (Video)
அரசாங்கத்திலிருந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை ஓரம் கட்டும் முயற்சியாக சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுசுப்பதவி பறிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையைப் பெறாமலேயே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் அவரின் சகாக்களும் சுயமாக முடிவெடுத்து சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவியைப் பறித்தெடுத்துள்ளனர்.
இது இந்த அரசின் வீழ்ச்சிக்கான ஆரம்பமாகும். ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே அதிகாரச் சமர் மூண்டுள்ளது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,