புதுக்குடியிருப்பு பகுதியில் 17 மணித்தியாலயத்தை கடந்தும் மின் தடை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் மின் தடை ஏற்பட்டமையால் குறித்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 17 மணித்தியாலத்தை கடந்த நிலையிலும் இன்று காலை 9 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இதனால் குறித்த கோம்பாவில் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே குறித்த மின்சார தடை தொடர்பாக நேற்றைய தினமும், இன்று காலையும் மின்சார
சபையினருக்கு முறைப்பாட்டினை வழங்கிய போது மரம் முறிந்து விழுந்ததாலேயே மின்சாரம் தடைப்பட்டதாகவும், சில மணித்தியாலங்களில் சரி செய்வதாகவும்
கூறியிருந்த நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri