நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் நாளை முதல் நீண்ட நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
மின்வெட்டு நேரத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை அங்கீகரிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
இதற்கமைய நாளை (23)முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின்வெட்டு நேரத்தை இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை(23) முதல் செப்டெம்பர் 25 ஆம் திகதி வரை பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
