தீபாவளி தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
தீபாவளி தினத்திற்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மூன்று தினங்களுக்கான மின்வெட்டு அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று மாலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தீபாவளி தினத்தன்றும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
தீபாவளி தினத்தன்று மின்வெட்டு

தீபாவளி தினத்தன்றும் மின்தடையை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தாம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், பெரும்பாலும் தீபாவளி தினத்தன்று மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (24) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri