மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, இன்று(22) மற்றும் நாளை(23) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நேர அட்டவணை
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று தினங்களுக்கான மின்வெட்டு அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று மாலை அறிவித்திருந்தார்.
தீபாவளி தினத்தன்று மின்வெட்டு
இந்நிலையில் தீபாவளி தினத்தன்றும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
தீபாவளி தினத்தன்றும் மின்தடையை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தாம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், பெரும்பாலும் தீபாவளி தினத்தன்று மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.