ஸ்பெய்ன் - போர்த்துக்கலில் அவசர நிலை பிரகடனம்
ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தமது நாடுகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளன.
அந்த இரண்டு நாடுகளும் விபரிக்க முடியாத அளவுக்கு மின்சார விநியோகத்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்தே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
மின்சார விநியோகத்தடையால், போக்குவரத்து விளக்குகள் செயலிழந்து, வீதிகளிலும், விமான நிலையங்களிலும் குழப்பம் ஏற்பட்டன.
போர்த்துக்கல்லில், நேற்று மதியத்துக்கு பின்னர், மின்சாரத்தடை ஏற்பட்டது பிரான்சின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தடை
இந்தநிலையில் சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஸ்பெயினிலும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவித்தார்.
மின்சாரத்தடையால், சுரங்கப்பாதை அமைப்புகள் திடீரென செயலிழந்தன. வீதிப் போக்குவரத்து விளக்குகள் அணைந்த பிறகு வீதிகளில் போக்குவரத்தில் தேக்கநிலை ஏற்பட்டது. எனினும் இன்னமும் இந்த மின்சாரத் தடைக்கான உரியக் காரணம் கண்டறியப்படவில்லை.
ஸ்பெய்னில் சில இடங்களுக்கு மின்சார விநியோகம் இயல்புக்கு திரும்பவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோன்று போர்த்துக்கல்லிலும் சில இடங்களுக்கு மின்சார விநியோகம் மீண்டும் செயற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார விநியோகத்தடைக்கு இணையத் தாக்குதல்கள் காரணமாக இருக்கலாம் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.