மன்னார் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு.. அவதியுறும் மக்கள் குறித்து கேள்வி எழுப்பிய எம்பி
கடந்த ஆட்சிக் காலங்களில் அதிகாரங்களில் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னாரில் ஏற்படும் மின் தடை பிரச்சினைக்கு ஏன் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னாரில் நேற்று (8) நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் குறித்த மின்தடை பிரச்சினை தொடர்பாக வினா எழுப்பப்பட்ட போது கருத்து தெரிவிக்கையில்,
"மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு வருவது குறித்து தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் பலர் தெரிவித்து இருக்கிறார்கள்.
உடன் தீர்வு
இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்கிறோம். அந்த வகையில், இது இந்த விடயம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறுவதாக மக்கள் கூறுகிறார்கள்.

ஆனாலும், நான் இது கேள்விப்பட்ட உடனேயே அரசாங்க அதிபரோடு தொலைபேசி தொடர்பு கொண்டு, அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட மின்சார சபையினுடைய நிறைவேற்று பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடைய மன்னார் மாவட்ட பொறியியலாளர், அதேபோல் இது தொடர்பான அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக இது தொடர்பாக நான் வினவி இருந்தேன்.
தற்பொழுது மின்சார சபையினுடைய நிறைவேற்று பொறியியலாளர் கூறியிருந்தார். இந்த மின்சார இணைப்பு உயிலங்குளத்தில் இருந்து மன்னார் தீவு பகுதிக்கு வருகின்ற மின்சார இணைப்பில் உடைய கம்பிகளில், இரவு நேரங்களில் இந்த காற்று கூடுதலாக இருக்கின்ற காலப்பகுதியில் அந்த மணல் அல்லது துகள்கள் ஈரத்துடன் அந்த மின் கம்பிகளில், மின்சாரம் வழங்குகின்ற விநியோக கம்பிகளில் படிவதால் அடிக்கடி மின்சாரம் தடை படுவதாக காரணம் கூறியிருந்தார்.
நான் கூறியிருந்தேன், தொடர்ச்சியாக இவ்வாறு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஒரு நிரந்தரமான தீர்வு நிச்சயமாக மக்களுக்கு வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri