இலங்கையில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா...! வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லாததால் மின்வெட்டுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தலைவர் டி. ஜெ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் தட்டுப்பாடு
"எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இது பாரிய பிரச்சினையாகும்.

எதிர்வரும் ஏப்ரல் 12, 13 திகதிகளில் எரிபொருள் கப்பல் ஒன்று வரவுள்ளது, ஆனால் நெப்தா வராது. அதற்குப் பதிலாக டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நெருக்கடி காரணமாக இரவு நேரங்களில் டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். எனவே, தேவையற்ற விளக்கையாவது அணைத்து, வீதி விளக்குகளையும் அணைத்து இற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri