வடக்கில் நான்கு மாவட்டங்களில் இன்று 13 மணி நேரம் மின் தடை
வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இன்று(26.10.2025)13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மின் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைப்பதற்கான
வவுனியா, மன்னார் 220 கே.வி. மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைப்பதற்கான வேலைகளுக்காகவே இன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் தடைப்படும்.

வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |