பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்! முல்லைத்தீவு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துகொள்ளக் கூடியவர்களை உடுப்புக்குளம் பகுதியில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் அருட் தந்தை லியோ ஆம்ஸ்ரோங் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கு சிவில் சமூக அமைப்பால் ஒழுங்கு படுத்தபட்ட பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி தற்போது திருமலையில் தரித்துள்ளது.
நாளை காலையில் திருகோணமலையில் ஆரம்பமாகி மணலாறு வழியாக முல்லைத்தீவு மாவட்டத்தை வந்தடையும். நாளை நண்பகல் முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் தமிழர் மரபுரிமை பேரவையினர், பேரணியை வரவேற்று பேரணியோடு இணைந்து தொடர்ந்து முல்லைத்தீவு நகரம் நோக்கி செல்லவுள்ளனர்.
எனவே முல்லைத்தீவில் பேரணியோடு ஒன்றுகூடக் கூடியயவர்கள் உடுப்புக்குளம் பகுதியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
