பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தை குழப்பாதீர்கள்! வேதனையுடன் வெளியான முக்கிய தகவல்
தமிழர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை யாரும் குழப்பாதீர்கள் என வடக்கு - கிழக்கு சிவில் சமூகங்களின் இணைத்தலைவர்களான வேலன் சுவாமிகள் மற்றும் சீலன் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர்கள் இதனைக்கூறியுள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை குழப்பவேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.
மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் இப் போராட்டத்தை யாரும் அரசியல் மயமாக்க வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மாலைகளை வழங்கி இந்த போராட்டத்தை சினிமா மயப்படுத்த வேண்டாம்.
இப்போராட்டத்தை நாங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி நிறைவு செய்ய திட்டமிட்டிருந்தோம்.
இருந்தபோதும் சில பல காரணங்களால் இப்போராட்டம் 7ஆம் திகதியே நிறைவடையவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தற்போது பலத்த ஆதரவுகளுடன் தடைகள் பலவற்றை கடந்து திருகோணமலை நகரை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
