வரலாற்றில் அதிக தவறுகளை இழைத்தவர்கள்: பதிலுக்காக காத்திருக்குமாறு மகிந்த அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று (01) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின பேரணியில் கலந்து கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.
இதன்போது மே தினக் கூட்டத்தில் நேற்று (01) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே பேரணி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மே பேரணியின் மூலம் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.போராடி வரும் பொதுஜன பெரமுன வலுவடைந்து வருவதை நாடு முழுவதிலுமிருந்து கெம்பல் பிட்டியவில் கூடிய மக்கள் நிரூபித்துள்ளனர்.
பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் தம்மையும் தனது அணியினரையும் திருடர்கள் என அவதூறு செய்து நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், மக்களின் அபிலாஷைகளுக்காக தான் அந்த சவால்களை எல்லாம் முறியடித்ததாகவும், சில கட்சிகள் உழைக்கும் மக்களை எப்போதும் நிலைநிறுத்தவே நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மே தின பேரணி மிகவும் முக்கியமானது."ஒவ்வொரு நாளும் உங்களை தெருச் சண்டைகளில் கைக்கூலியாக வைத்திருக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
வரலாற்றில் அதிக தவறுகளை இழைத்தவர்கள்
இந்த மே பேரணி தீர்க்கமானது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்த நாடு எங்கே போகும் என்ற முடிவை இன்று முதல் நாட்டுக்கு காட்ட வேண்டும்?... ."
“வரலாற்றில் அதிக தவறுகளை இழைத்தவர்கள்.. இந்த நாட்டின் எதிர்காலத்தை அழித்தவர்களின் மடியில் விழ வேண்டுமா என எண்ணிப்பாருங்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் ஆசி பெற்ற வேட்பாளர் மாத்திரமே வெற்றி பெறுவார்.
" ஏன் இப்படி நம்பிக்கையோடு சொல்கிறார் என்று சிலர் யோசிக்கின்றீர்கள்.நேரம் வரும் போது அந்த முடிவை நாட்டுக்கு தெரிவிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |