அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்! 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடந்த விடயம்

United States of America Weather World
By Shadhu Shanker Feb 24, 2026 07:42 PM GMT
Report

153 ஆண்டுகளாக தினசரி பத்திரிகையை வெளியிட்டு வந்த The Boston Globe, வரலாற்றில் முதல் முறையாக ஒரு நாளிதழின் அச்சிடுதலை ஒத்திவைத்துள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானின் எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய பென்டகன்! சர்வதேச கடல் பகுதியில் பதற்றம்..

ஈரானின் எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய பென்டகன்! சர்வதேச கடல் பகுதியில் பதற்றம்..

 முதல் முறை

153 ஆண்டுகளுக்கும் மேலாக, The Boston Globe-இன் அச்சு பணியாளர்கள் கடுமையான வானிலை, தொழில்நுட்ப கோளாறுகள், உலகளாவிய தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல சவால்களை தாண்டி தினசரி பத்திரிகையை அச்சிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்! 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடந்த விடயம் | Historic American Blizzard Boston Globe Postpone

ஆனால் நேற்றுமுன்தினம் தினம்(23) ஏற்பட்ட கடுமையான பனிப்புயல் காரணமாக, செவ்வாய்க்கிழமை காலை பத்திரிகையை அச்சிட்டு விநியோகிப்பது சாத்தியமில்லை என நிர்வாகிகள் தீர்மானித்தனர் என அந்த பத்திரிகை தங்களது இணையதளத்தில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளது.

அச்சு பதிப்பை சந்தாதாரர்களுக்கு வழங்குவது புதன்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பதிப்பு, புதன்கிழமை பதிப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்த முடிவு எங்களால் எளிதில் எடுக்கப்படவில்லை,” என்று Boston Globe Media நிறுவனத்தின் அச்சு செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் ஜோஷ் ரசல் தெரிவித்ததாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நாமலின் உரை இரத்தானமைக்கு இதுதான் காரணம்.. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு வெளியிட்ட தகவல்

நாமலின் உரை இரத்தானமைக்கு இதுதான் காரணம்.. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு வெளியிட்ட தகவல்

கடுமையான பாதிப்பு

“இன்றிரவு பணியாளர்களை பணிக்கு அழைத்தாலும், பத்திரிகைகளை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றி அனுப்ப முடியுமா என்ற நம்பிக்கை இல்லை. குறிப்பாக இறுதி விநியோக கட்டம் (‘last mile’) சாத்தியமாகுமா என்ற நம்பிக்கை எங்களுக்கில்லை,” என்றார். திங்கட்கிழமை விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெறும் 25% பத்திரிகைகளே சந்தாதாரர்களை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்! 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடந்த விடயம் | Historic American Blizzard Boston Globe Postpone

பனியும் பலத்த காற்றும் காரணமாக, செவ்வாய்க்கிழமை பதிப்பை அச்சிடுவதற்காக அச்சு நிலையத்துக்கு பணியாளர்கள் பாதுகாப்பாக செல்வது சாத்தியமாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Massachusetts மாநிலத்தின் பிரிஸ்டல் கவுண்டி பகுதியில், அங்கு டான்டனில் உள்ள அச்சு நிலையம் அமைந்துள்ளது, திங்கட்கிழமை இரவு வரை 32 அங்குல பனி பதிவாகியுள்ளதாக National Weather Service தெரிவித்துள்ளது. இன்றைய இணைய காலத்தில் வாசகர்கள் அச்சு பத்திரிகைகளில் குறைவாகவே சார்ந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை 2026 - பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை 2026 - பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

பனிப்புயல்

2025 ஆம் ஆண்டு Pew Research Center நடத்திய கருத்துக்கணிப்பின் படி, அமெரிக்காவில் உள்ள பெரியவர்கள் மத்தியில் வெறும் 7% பேர் மட்டுமே அச்சு பத்திரிகைகள் அல்லது இதழ்களில் இருந்து அடிக்கடி செய்திகளைப் பெறுவதாக கூறியுள்ளனர். இதற்கு மாறாக, 56% பேர் ஸ்மார்ட்போன், கணினி அல்லது டேப்லெட் மூலம் செய்திகளைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்! 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடந்த விடயம் | Historic American Blizzard Boston Globe Postpone

1872 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக The Boston Globe-இன் தினசரி அச்சிடுதல் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1950 மற்றும் 1960களில் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் காரணமாக சில முறை அச்சிடுதல் நிறுத்தப்பட்டிருந்தது. 1978 பிப்ரவரி 7 ஆம் தேதி ஏற்பட்ட மற்றொரு வரலாறு காணாத பனிப்புயலின் போதும், குறைந்த அளவில் ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டிருந்தன.

ஆனால் அதிகமான பனி காரணமாக விநியோக வாகனங்கள் ஒரு அல்லது இரண்டு மைல்கள் தூரத்திற்கும் மேல் செல்ல முடியாததால், பல பிரதிகள் வாசகர்களை சென்றடையவில்லை.

அவசரநிலை பிரகடனம்

இந்த வார பனிப்புயல் அருகிலுள்ள Rhode Island மாநிலத்திலும் வரலாறு காணாத பனிவீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. T.F. Green International Airport விமான நிலையத்தில் சுமார் 38 அங்குல பனி பதிவாகி, 1978 ஆம் ஆண்டின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. மேலும், பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது.

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்! 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடந்த விடயம் | Historic American Blizzard Boston Globe Postpone

நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.    

நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US