உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்த விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Jaffna Sri Lanka Ministry of Agriculture
By Shan Dec 18, 2023 03:36 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் களஞ்சிய அறையில் பழுதடைந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் இன்று(18.12.2023) நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்தமை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள்: மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள்: மக்களுக்கு எச்சரிக்கை

உருளைக்கிழங்கு விதைகள் 

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட களஞ்சியமொன்றில் வைத்திருந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளில் பெரும்பாலானவை பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் யாழ். மாவட்ட செயலாளர்,பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், திட்ட பணிப்பாளர் குறித்த களஞ்சியசாலையை நேற்று(17) பார்வையிட்டதோடு பெருமளவான உருளைக்கிழங்கு விதைகள் பாதிக்கப்பட்டமையை அவதானித்துள்ளனர்.

உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்த விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Potato Seeds Are A Rotten Affair Jaffna

கலந்துரையாடலில் குறித்த நிலைமை ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக மாவட்ட செயலாளர் துறைசார் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதுடன் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

பழுதடைந்தமைக்கான காரணம்

மேலும் அவர் தெரிவிக்கையில், உருளைக்கிழங்கு விதைகள் பாரதூரமான ஒருவகை பக்டீரியா பாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்த விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Potato Seeds Are A Rotten Affair Jaffna

பழுதடையாதவற்றை தெரிவு செய்து பாவித்தாலும் மண்ணுக்கும் பயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அதை பயன்படுத்தமாட்டோம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கு ஆராயப்பட்ட விடயங்களை குறித்த நவீனமயமாக்கல் திட்ட பிரிவுக்கும் வடக்கு ஆளுநர் மற்றும் விவசாய அமைச்சருக்கும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்பவைக்கு மாவட்ட மட்டத்தில் கருத்து கேட்பதில்லை என கூறப்பட்டது.

2024 ஆண்டு முதல் எவ்வித திட்டங்களாயினும் மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தின் அனுமதி மற்றும் ஆலோசனை பெறப்பட்டே செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்த விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Potato Seeds Are A Rotten Affair Jaffna

குறித்த விசேட கூட்டமானது அரச விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி பிரிவு, விதைகள் ஆராய்ச்சி பிரிவு, கமலநல அபிவிருத்தி திணைக்களம் என துறை சார்ந்த தரப்புக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி(Video)

இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி(Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US