மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை இழிவுபடுத்தி சுவரொட்டிகள்
மட்டக்களப்பில் (Batticaloa) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை இழிவுபடுத்தி மாவட்டத்தின் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பின் சில பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் : தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு
கருத்துக்கள்
குறித்த சுவரொட்டிகளில் “நீங்கள் இன்னமும் ஏமாந்து கொண்டிருக்கின்றீர்களா?” என தலைப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாருங்கள் கஞ்சி குடியுங்கள், எனக்கு மேலும் டொலர்களை பெற்றுத் தாருங்கள், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் டொலர் சேர்க்கும் கொள்ளையில் நீங்களும் பங்களிக்கிறீர்களா என்றவாறான கருத்துக்கள் அந்த சுவரொட்டிகளில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |