வரலாற்று சாதனை படைத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரலாற்றிலேயே உயர்ந்த அளவான வரி வருமான வசூலை 2025 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது.
இந்த மாதம்17ம் திகதி வரை கிடைத்த கணக்குப்படி, மொத்த வருவாய் 2,002,241 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இந்த வருவாய் தொகை, 2024 இல் பதிவான வருவாயை விட 60,079 மில்லியன் ரூபா அதிகம் என உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ருக்தேவி பி. ஹெச். பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2024 இல் மொத்த வசூல் 1,942,162 மில்லியன் ரூபாவாகும:, இதை 2025 இல் முதல் 11 மாதங்களிலேயே உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்துள்ளது.
இந்த சாதனை அரசின் நிதிநிலையை பலப்படுத்துவதோடு, தேசிய வருமான சேகரிப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நடைமுறையிலுள்ள வரிச்சட்டங்களின்படி கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றிய வரிப்பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிபப்தாக ஆணையாளர் நாயகம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பும் இந்த சாதனையை எட்ட உதவியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri