புத்தளம் நகர் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகள்!
புத்தளம் நகரின் பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவத்தை ஒத்த உருவம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதன், 17வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றிருந்தன.
அதன் சூடு தணியும் முன்னரே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் கொண்ட சுவரொட்டிகள் புத்தளம் நகரின் பல முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
நேற்று(20.05.2026) புத்தளம் பேருந்து நிலையம் உட்பட பல இடங்களில் ஒரு குழுவினர் இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
அப்பகுதி மக்கள் உடனடியாக புத்தளம் தலைமையக சொலிஸாரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
பாதுகாப்பு வட்டாரங்களின்படி, அந்தக் குழுவைப் பிடிக்க, நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பொலிசார் பரீட்சித்து வருகின்றனர்.
அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன்.. யாழ். பல்கலை விரிவுரையாளர் முன்வைத்த குற்றச்சாட்டு
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam