அதிகரிக்கும் டெங்குநோய்! பலர் உயிரிழப்பு
நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 29 ஆயிரத்து 589 டெங்குநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயலணி அறிவித்துள்ளது.
அவர்களில் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்களின் பிரகாரம் தெரிய வந்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு செயலணியின் தரவுகளின் பிரகாரம் அண்மைக்காலமாக நாட்டில் மீண்டும் டெங்கு நோய் மிக வேகமாக பரவி வருகின்றது.
கட்டுப்பாட்டு நடவடிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சில பிரதேச செயலகங்கள் டெங்கு அபாய வலயமாக இனம் காணப்பட்டு அங்கு டெங்கு நோய் பரம்பல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, ரத்தினபுரி மாவட்டவங்கள் டெங்கு நோய் பரவும் அபாயம் கொண்ட மாவட்டஙகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri