தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மட்டக்களப்பிற்கு! வேட்பாளர்கள் உத்தரவாதம்
தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வாக்கெடுப்பில் ஞா. சிறிநேசனுக்கே தனது ஆதரவு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் எனவும், இதற்கு மாவட்ட தலைவர் என்ற அடிப்படையில் எவ்வித முடிவும் கிளை சார்பில் எடுக்கப்படவில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(19.01.2024) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன், மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் பொதுச் சபை உறுப்பினர்களை சந்தித்து ஆதரவை கோரிவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் “ தலைவர் தெரிவில் யார் வெற்றிபெற்றாலும் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எங்களது பூரண ஆதரவை நாங்கள் வழங்குவோம்.
மேலும், எமது கட்சி தலைவர் தெரிவில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும், கட்சிக்கு அப்பாற்பட்ட தரப்புக்களிலும் முன்வைக்கப்படுகிறது.
இந்த விடயத்தில் ஒன்றை புரித்துக்கொள்ளவேண்டும். தலைவர் தெரிவானது எங்கள் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்களை அடிப்படையாக வைத்து இடம்பெறும் ஒன்று.
இதில் வெளிதரப்பினரின் கருத்துக்களோ, சமூக ஊடகங்களில் இடம்பெறும் கருத்தாடல்களோ தலைவர் தெரிவிற்கு எந்த பங்களிப்பையும் வழங்காது” என்றார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan