ரைசியின் உயிரிழப்பின் பின்னர் ஈரானில் உருவாகியுள்ள நிலைமை

Iran World Ebrahim Raisi
By Rukshy May 22, 2024 12:26 PM GMT
Report

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு மக்களிடையே கலவையான எதிர்வினைகளை உருவாகியுள்ளது.

ஒருதரப்பு துக்கத்தை அனுசரித்து வரும் நிலையில் மற்றொரு தரப்பு மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகிறது.இதனை ரைசியின் மரணத்திற்குப் பின்னரான ஈரானின் சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகளே இதனை பிரதிபலிக்கின்றன.

ஈரான் ஜனாதிபதியின் மரணம் எப்படி நிகழ்ந்தது

ஈரான் ஜனாதிபதியின் மரணம் எப்படி நிகழ்ந்தது

சமூக வலைத்தள பதிவுகள்

சமூக வலைத்தள பயனர் ஒருவர், "நாங்கள் அனைவரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "நீங்கள் ஒரு சிறந்த ஆளுமை. நாட்டு மக்களின் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளீர்.” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உலங்கு வானூர்தி விபத்து பற்றிய செய்திக்குப் பிறகு, தெஹ்ரானில் உள்ள அரசாங்க ஆதரவாளர்கள் ரைசிக்காக பிரார்த்தனை செய்ய கூடினர்.

ரைசியின் உயிரிழப்பின் பின்னர் ஈரானில் உருவாகியுள்ள நிலைமை | Positive And Negative Implications Raisi S Death

நேற்று முன்தினம் (20) தெஹ்ரானில் ரைசியின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருப்பினும், ரைசிக்கு அஞ்சலி செலுத்தவும் கௌரவிக்கவும் பெருந்திரளான மக்கள் கூட்டம் எங்குமே கூடவில்லை.

மற்றொரு புறம் மக்கள் பலர் ரைசியின் மரண செய்திக்கு மகிழ்ச்சியான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கொண்டாட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சிலர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோக்களில் மக்கள் மகிழ்ச்சியாக பட்டாசு வெடிக்கும் காட்சிகள் பதிவேற்றியுள்ளதுடன் ரைசிக்கு எதிரான சில கடுமையான கருத்துகள் அவரின் இன்ஸ்ராகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இளம் தலைமுறையினர்

இந்நிலையில், ஈரானின் பெரும்பான்மையான மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சமூக ஊடகங்களில் இருந்து கணிக்க முடியாது. காரணம் பெரும்பாலான இளைஞர்கள் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர்.

ரைசியின் உயிரிழப்பின் பின்னர் ஈரானில் உருவாகியுள்ள நிலைமை | Positive And Negative Implications Raisi S Death

சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவது இளம் தலைமுறையினர் என்பதால், ரைசியின் மரணத்தை கொண்டாடுபவர்களில் கணிசமானோர் இளைஞர்களாகவே உள்ளனர்.

ஈரானில் முக்கிய சமூக வலைத்தளங்களுக்கு தடை இருந்தபோதிலும், பெரும்பாலான இளைஞர்கள் `VPN’ மூலம் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால், சமூக ஊடகங்களில் ரைசி மரணத்தை கொண்டாடும் வகையில் பதிவிட்டுள்ள ஈரானியர்கள் ஈரானில் இருந்து பதிவிட்டுள்ளனரா அல்லது ஈரானுக்கு வெளியில் இருந்து செய்துள்ளார்களா என்று உறுதியாக கூற முடியாது. 

மரண தண்டனை விதித்த விவகாரம் 

தற்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு 1980இல் மரண தண்டனை விதித்த விவகாரம் தொடர்பாக ரைசி விமர்சிக்கப்படுகிறார்.

அந்த ஆணையத்தில் நான்கு பேர் கொண்ட குழுவை மக்கள் `மரணக் குழு’ என்று அழைத்துள்ளனர்.

ரைசியின் உயிரிழப்பின் பின்னர் ஈரானில் உருவாகியுள்ள நிலைமை | Positive And Negative Implications Raisi S Death

இதன் துணை வழக்கறிஞராக ரைசி இருந்ததோடு இந்தக் குழு, ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் ஆயதுல்லா காமெனி தீர்ப்பின்படி ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை தூக்கிலிட்டது.

உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 இல் 167 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் சிலர் நினைவுபடுத்தி பதிவிட்டுள்ளனர்.

இந்த விமானம் ஜனவரி 2020இல் ஈரானின் புரட்சிகர படையால் (ஐஆர்ஜிசி) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அப்போது உக்ரைன் விமானம் மீது தவறுதலாக ஏவுகணை பாய்ந்ததாக ஐஆர்ஜிசி கூறியது.

பின்னர், ஈரான் இந்த வழக்கில் 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது, ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் கீழ்மட்ட அதிகாரிகள் தான், உயர்மட்ட அதிகாரிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று சிலர் தங்களது பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்து

இந்த விமான விபத்தில் ஈரானைச் சேர்ந்த ஹமாத் இஸ்மாயிலின் தனது மகள் மற்றும் மனைவியை இழந்தார். ஹமாத் தற்போது கனடாவில் வசித்து வரும் நிலையில் தனது எக்ஸ் தளத்தில், "மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ரைசி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, ரைசி உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான உரிமை வழங்கப்படவில்லை.

ரைசியின் உயிரிழப்பின் பின்னர் ஈரானில் உருவாகியுள்ள நிலைமை | Positive And Negative Implications Raisi S Death

ரைசியின் பெயர் எப்போதும் வரலாற்றில் குற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கும்" என்று இஸ்மாயிலின் கூறுகிறார்.

ஈரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினியின் மரணத்திற்குப் பிறகு 2022 இல் அங்கு வெடித்த கிளர்ச்சியையும் மக்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.

22 வயதான மாசா அமினி பொலிஸ் காவலில் இறந்ததோடு ரைசி அந்த ஆண்டுதான் ஈரானின் ஜனாதிபதியானார்.

"ஈரானில் நடந்த போராட்டங்களில் எந்த உயிரிழப்பும் இல்லை" என்று ரைசி ஒரு நிருபரிடம் கூறுகிறார். ஆனால் உண்மையில், 2022இல் ஈரானில் நடந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில் ஈரானில் இதுவரை காலமும் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி தொடர்பில் அந்நாட்டு மக்களிடையே பல எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.

ஈரானில் உள்நாட்டு போர் உருவாகலாம் : எச்சரிக்கும் நிபுணர்கள்

ஈரானில் உள்நாட்டு போர் உருவாகலாம் : எச்சரிக்கும் நிபுணர்கள்

ஈரானிய ஜனாதிபதி கொல்லப்பட்டது அமெரிக்க உலங்குவானூர்தியில்! உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள சம்பவம்

ஈரானிய ஜனாதிபதி கொல்லப்பட்டது அமெரிக்க உலங்குவானூர்தியில்! உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள சம்பவம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US