ஈரானிய ஜனாதிபதி கொல்லப்பட்டது அமெரிக்க உலங்குவானூர்தியில்! உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள சம்பவம்
உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜனாதிபதி Ebrahim Raisi கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள அதேவேளை, ஊடகப் பரப்பில் இந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் தொடர்ந்து எழுப்பிக்கொண்டு இருக்கின்றது.
ஈரான் ஜனாதிபதி கொல்லப்பட்டது ஒரு விபத்துத்தானா அல்லது அது ஒரு திட்டமிட்ட படுகொலையா?
படுகொலை என்றால், ஈரானின் அந்த உலங்குவானூர்தி எப்படி விழவைக்கப்பட்டது?
யார் அந்தப் படுகொலையைச் செய்திருப்பதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது - இஸ்ரேலின் மொசாட்டா? அல்லது அமெரிக்காவின் சீ.ஐ.ஏ.ஆ?
அல்லது.. அதனைக் கடந்து வேறு ஏதாவது தரப்புக்களா?
உலக ஊடகப் பரப்பில் பரவலாக எழுப்பப்பட்டுவருகின்ற இதுபோன்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த வானூர்திச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து விவாதிக்கப்பட்டுவருகின்ற சிலconspiracy theories-அதாவது சதிக்கோட்பாடுகள் பற்றி பார்க்கின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |