கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க ஐவர் அடங்கிய குழு
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களை கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டது.
ஐந்து நீதியரசர்களைக் கொண்ட இந்த குழுவில் பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூூர்ய மற்றும் நீதிபதிகள் புவனேகா அலுவிஹரே, பிரியந்த ஜெயவர்தன, முர்டு பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்குவர்.
இந்த மனுக்களை ஐக்கிய தேசியக்கட்சியின தவிசாளர் வஜிர அபேவர்தன, அதன் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர்- கபில ரேணுக பெரேரா, கொள்கை மாற்று மையத்தின் நிர்வாக இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தா சமரசிங்க ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர் .
அதேநேரம் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனமும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார
ஆணைக்குழு யோசனையை எதிர்த்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
