மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக கஞ்சி?
பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவாக வழங்கப்படும் பாலுக்கு பதிலாக கஞ்சி வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்குவதற்கு பதிலாக உள்நாட்டு அரிசியினால் தயாரிக்கப்படும் ஒரு கோப்பை கஞ்சியை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 923 பாடசாலைகளில் சத்துணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு இவ்வாறு சத்துணவு கடந்த 2012ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சத்துணவாக வழங்கப்படும் ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக ஒரு கிளாஸ் கஞ்சி வழங்குமாறு அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்காக ஒர் மாணவருக்காக 23 ரூபா ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri