சுவிட்சர்லாந்தில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘போராட்டம்’ சிறப்புத் திரையிடல்!
தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா வழங்கும் ‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்று (03) மாலை நடைபெற்றது.
சூரிச் நகரில் அமைந்துள்ள Kino Claudia திரையரங்கில் மாலை 6.00 மணிக்கு இந்தச் சிறப்புத் திரையிடல் இடம்பெற்றது.
சிறப்புத் திரையிடல்
இந்நிகழ்வில் திரைப்படத் தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா கலந்து கொண்டதுடன், ரசிகர்கள் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ளதுடன், IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளை முன்னெடுத்துள்ளன.
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது.
கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், இளைஞர் ஒருவரின் கனவு, குடும்பம், காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது.



இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan