இன்னும் சில நாட்களில்.. சரித்திரம் படைக்கவுள்ள போராட்டம் திரைப்படம்
யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் கோலமாக இடம்பெற்றது.
இந்த திரைப்படமானது,உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாகவும், ஈழத்தை களமாகவும் கொண்டு பல சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
கதாநாயகனாக றீகன் அறிமுகமாகியுள்ளதுடன் , கதாநாயகியாக நிவேதிகா ராசையா நடித்துள்ளார்.
இதேவேளை, ஈழ சினிமாவின் பிரபல நடிகர் நடிகைகளும் நடித்துள்ளார்கள்.
அத்துடன், இந்த திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
இசை வெளியிட்டு விழா
படத்தில் பாடல்களை வாகீசன் ராசையா , உமாகரன் ராசையா , பொத்துவில் அஸ்மீன் , பூவன் மதீசன் , கே.எஸ் சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

பாடல்களை தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா, பாடகர் சத்யன், பாடகி கோவை கமலா ஆகியோருடன், ஈழத்தின் பிரபல பாடகரான வாகீசன், கோகுலன் சாந்தன், தேவன் அய்யா , பூவன் மதீசன், டயஸ் மற்றும் அக்சலா ஆகியோர் பாடியுள்ளனர்.
இசை வெளியீட்டு நிகழ்வில், தென்னிந்தியாவின் பிரபல யூடியூப்பரான மைக் செட் சிறீராம், பிரபல பாடகர் சத்யன் உள்ளிட்டோருடன் திரைப்பட குழுவினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.



