அரசியல்வாதிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு! ராஜபக்ச குடும்பத்தினர் குறித்து வெளியான தகவல்
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதிகளாக ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளதாக தெரியவருகிறது.
அரசியல்வாதிகளின் பிரபல தன்மை குறித்து சுகாதார கொள்கை நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கமைய, மிகக் குறைந்த பிரபல்யத்தன்மை கொண்ட அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ள நிலையில் அதற்கு அடுத்த இடத்தில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளார்.
அவர்களின் மதிப்பெண்கள் முறையே - 73 மற்றும் - 64 ஆகும். கோட்டாபய ராஜக்ச - 51 மற்றும் மகிந்த ராஜபக்ச - 52 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
மக்கள் மத்தியில் அதிகம் பிரபல்யத்தன்மை கொண்டவராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்சன்னி பெர்னாண்டோ புள்ளே உள்ளார். அவருக்கு 8 புள்ளிகள் உள்ளன.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இவ்வாரத்திற்கான அரசியல் பார்வை,