மீண்டும் இடறி விழுந்த பரிசுத்த பாப்பரசர்
பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் வலது முன்கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான்(Vatican) ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இன்று காலை பார்வையாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது இடறி விழுந்தபோதே இந்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பாப்பரசர் கடந்த 6 வாரங்களில் இன்று இரண்டாவது முறையாக இடறி வீழ்ந்துள்ளார்.
பரிசுத்த பாப்பரசர்
எனினும் இன்றைய சம்பவத்தின்போது திருத்தந்தைக்கு எந்த எலும்பு முறிவும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வத்திக்கானின் செய்தி அலுவலகம் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பாப்பரசருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவத்திற்குப் பின்னரும், திருத்தந்தை பிரான்சிஸ் தனது திட்டமிடப்பட்ட பார்வையாளர்களை சந்தித்தார்.
அத்துடன் உலக உணவுப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் நோசிபோ நௌஸ்கா-ஜீன் ஜெசிலுடனான சந்திப்பும் இதில் அடங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |