கரை ஒதுங்கிய டொல்பின் மீன்: காண படையெடுத்த மக்கள்
அம்பாறை(Ampara) - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற்பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று(16) மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.
குறித்த மீன் சுமார் 4 முதல் 5 அடி வரையான நீளம் கொண்டதுடன் இது இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொல்பின் மீன்
அத்துடன், குறித்த மீனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் பெருமளவில் வருகை தந்துள்ளனர்.
இது தவிர ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கியுள்ளது.
அத்துடன், மருதமுனை கடற்கரை பகுதிகள் விரைவாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.
கடற்றொழில்
இப்பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக தோணிகள் வள்ளங்கள் கரையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.
மேலும், கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள கடற்றொழிலாளர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |