புறக்கணிக்கப்படும் வறிய குடும்பங்கள்: மக்கள் கண்ணீர் கோரிக்கை (Video)
உதவித் திட்ட தெரிவில் வறிய குடும்பங்கள் புறக்கப்பட்டுள்ளதாக வவுனியா தோணிக்கல் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு தெரிவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இரு நேரம் மட்டும் உணவு உண்டு வாழும் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் நேற்று (24.06.2023) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன.
தீர்வு வேண்டும்
இதனை கேட்க சென்றால் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையீனமாக பதிலளிப்பதுடன் எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர், முதியவர்கள் எனப்பாராது மரியாதை இன்மையாகவும் பேசுகின்றார்.
எமது கிராமத்தில் உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என ஆதங்கத்தினை தெரிவித்ததுடன், தமக்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |















விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
