நல்லூரானும் குறிவைக்கப்பட்டலாம்..! துண்டாடப்படும் தமிழர் நிலத்தொடர்ச்சி : அச்சத்தில் மக்கள்
ஈழத்தமிழர்களுடைய பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமான நல்லூரானுக்கு நேற்று இரதோற்சவம் இடம்பெற்ற நிலையில் அங்கு கூடிய மக்களின் எண்ணிக்கை குறித்து வெளியாகி இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் காலங்களில் கூட இந்த நல்லூரானுடைய நிலமும் பறிபோகலாம் என்ற அச்ச சூழ்நிலை மக்களிடத்தில் உருவாகியுள்ளது.
அதாவது நல்லூரானுடைய மகோற்சவம், இரதோற்சவம் போன்ற காலப்பகுதியில் மக்கள் கூடுகின்றபோது ஈழத்தமிழர்களுடைய திரட்சி நிலையைக் இது காட்டுகின்றது.
குறிப்பாக மிகப் பெரிய அளவிலே ஈழத்தமிழர்கள் ஒன்று கூடுகின்ற இடமாக அடையாளத்தை வெளிப்படுத்துகின்ற இடமாக இருக்கும் இந்த நல்லூர், இலங்கையினுடைய சிங்கள - பௌத்த மனநிலைக்கும், தமிழர்களுடைய இருப்பை கேள்விக்கு உட்படுத்துபவரகளுக்கும் பெரும் தலையிடியாக மாறி இருக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விடயங்களை ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
