மன்னார் பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை
மன்னாரில் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயமானது நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக...
இதன்போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில் நிறுத்தப்பட்டு கவனிப்பின்றிய நிலையில் காணப்பட்டதாக மன்னார் போக்குவரத்து சாலை தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல தூர பகுதிகளுக்கான சேவை நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கொழும்பு கண்டி போன்ற தூர பகுதிகளுக்கு மிகவும் பழுதடைந்த பேருந்துகளை மன்னார் போக்குவரத்து சாலை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், மன்னார் பொது போக்குவரத்து சாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் விரைவில் அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மன்னார் போக்குவரத்து சாலையின் இந்த நிலை தொடர்பிலும் மன்னார் போக்குவரத்து சாலையில் பயன்படுத்தப்படும் பேருந்துகளின் நிலை தொடர்பிலும் பல வருடங்கள் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை
மேலும், கடந்த இரண்டு வருடங்கள் எந்த ஒரு உயர் அதிகாரிகளும் மன்னார் போக்குவரத்து சாலைக்கு விஜயம் மேற்கொண்டு மக்கள் முறைப்பாடுகள் தொடர்பாகவோ பேருந்து சாலையின் நிலை தொடர்பாக பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 15 நிமிடங்கள் முன்

அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்... புடினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan
