யாழில் வீதியால் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் (Jaffna) கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக..
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வறுமை காரணமாக காலை உணவு அருந்தாமல் வெளியே சென்றுள்ளார்.
பின்னர் மதியம் கோண்டாவில் வீதியால் பயணித்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
