தென்னிலங்கையில் சினிமா பாணியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்
ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அக்கரகல்கொட, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொடூரமாக கொலை
உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வீதியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நிலையில் சந்தேக நபர் வாகனத்தை நிறுத்தி, காயமடைந்த நபரை அணுகியுள்ளார்.
பின்னர் கோடரியால் தாக்கி, கொலை செய்துவிட்டு கெப் வண்டியில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
சந்தேக நபர் கைது
சடலம் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி மற்றும் கெப் வண்டியுடன் 27 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லுணுகம்வெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
