சுவிஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா
நொசத்தல் இளையோர் , தமிழ் பெண்களுடன் கரம் கொடுத்தல்” எனும் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து நடாத்திய மூன்றாவது தைப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
குறித்த பொங்கல் விழாவானது நேற்றுமுன் தினம்(27) லசத்போம் நகரில் இடம்பெற்றுள்ளது.
தமிழர் வாழ்வியல் உண்மைகள்
நொசத்தல்வாழ் பல்லின மக்களின் இன,மத, மொழி கடந்த ஒற்றுமை உணர்வின் ஒன்றிணைவாக்கம் மேலோங்கியிருந்ததாகவும் தமிழர் வாழ்வியல் உண்மைகளை வெளிநாட்டவர்களுக்கு கொண்டு சேர்த்த பெருமையை இப்பொங்கல் விழா வெளிப்படுத்தியுள்ளது.
இவ்விழா தமிழரின் சமய விஞ்ஞான அழகியல் தன்மைகளையும் உள்ளடக்கி எமது கலைநிகழ்வுகளையும் தேச எழுச்சியையும் நினைவு கூர்ந்த நாளாகவும் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் நாட்டின் முக்கிய அரசியல் கலாச்சார சமூக பிரமுகர்களும் கத்தோலிக்க மதகுருவும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
மேலும், இருஅமைப்புக்களும் தொடர்ச்சியாக தனிநபராகவும் அமைப்பு ரீதியாகவும் செயற்திட்டங்களிற்கான துறைகளில் பங்குகொண்டு நான்கு தடவைகள் நாம் பன்னாட்டவருக்கான திறமை பரிசு பெற்ற வெற்றியாளர்களாக மாநில ரீதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறோம் என்று பெருமையுடன் தெரிவித்திருந்தனர்.
பல்துறைசார் அமைப்புகள்
அத்துடன் மாநில கலாச்சார நிகழ்வுகள், பல்துறைசார் அமைப்புகளுடன் இயங்கும் தன்மை , மாநிலம் சார்ந்த போராட்டங்கள் , அரசாங்க கூட்டங்கள் அனைத்திலும் தொடர்ந்தும் நாம் பங்களிப்பு செய்துவருகின்றோம் என்றும் தமிழர்கள் செயல்திறன் கொண்டவர்கள் என்றும் நாம் பாராட்டுதல்கள் பெற்றோம்.
தமிழர்களாகிய நாம் இயற்கையுடன் இணைந்து வாழும் தன்மையையும், கலை, கலாச்சார, பாரம்பரிய அடையாளங்களையும் நாம் வாழும் புலம்பெயர்மண்ணிலே ஆழமாக பதித்துவிட்டோம் என்ற உணர்வே எல்லோரது மனதிலும் நிறைந்திருந்தது என கூறியுள்ளனர்.
இதற்கமைய எமது நிகழ்வினை அனைத்து சுவிஸ் வாழ் மக்களிடமும் அன்றைய தினமே சமூக வலைத்தளங்கள்,ஊடகங்கள், முகநூல்கள் என்பவற்றில் பகிரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |