பிரித்தானியாவில் தமிழ் காலாச்சாரத்துடன் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டம்
இங்கிலாந்தின் சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ், பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் ஒரு கோலாகலமான பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தியுள்ளார்.
இதன்போது பிரதமரின் அதிகாரபூர்வ இல்ல நுழைவாயில் ஒரு பாரம்பரிய கோலத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகைபூ அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானை மற்றும் கரும்பு என்பனவும் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் சமூகத்தை வரவேற்று உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ், உலகப் போரின் முன்னோடி விமானிகள் முதல் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு தமிழர்களின் நீண்டகால பங்களிப்புகளை பாராட்டியுள்ளார்.
மேலும் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட தமிழ் கல்வியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஆதரிக்கும் திட்டம்
இலங்கையில் தமிழரின் நிலையை பற்றி உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு திட்டத்திற்காக 11 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நீதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரது உரையை தொடர்ந்து உஷா ராகவனின் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளதுடன் கொண்டாட்டத்திற்கு ஒரு கலாச்சார மெருகை ஏற்றியுள்ளது.
பாரம்பரிய தமிழ் உணவு
இதேவேளை இந்நிகழ்வில் தோசை, இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் உணவு பதார்த்தங்கள் மேலைத்தேச கானப்பே வடிவில் பரிமாறப்பட்டுள்ளது.

மேலும் கல்வியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உட்பட பிரித்தானிய தமிழ் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள், குறிப்பாக இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் விக்ரம் துரைசுவாமி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: ஆசியா நோக்கி நகர்கின்றதா முழு அளவிலான யுத்தம்..!
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri