பொலித்தீன் உறைகளுக்குப் புதிய வரி விதிப்பு: அரசாங்கம் தீவிர கவனம்
பொலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு புதிய வரியொன்றை அல்லது மேலதிக கட்டணம் ஒன்றை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட எந்தவொரு விற்பனை நிலையத்திலும் பொலித்தீன் உறைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது.
பொலித்தீன் உறைகள்
அதற்குப் பதிலாக கட்டணமொன்று அறவிடப்படும் சூழ்நிலை உருவாகும்.
சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான வரி விதிப்பொன்றை மேற்கொள்வது குறித்து சுற்றாடல் அதிகார சபை, நிதியமைச்சுக்கு முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்துள்ளது.
தற்போதைக்கு குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் தீவிர கவனம் திரும்பியுள்ளது.
பொலித்தீன் உறைகளுக்கு வரி விதிப்பது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் அதற்கென புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் சுற்றாடல் அதிகார சபை முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




