உல்லாச விடுதியில் 22 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்று அதிகரித்துக் காணப்படும் நிலையில், தொடர்ச்சியாக சுகாதாரப் பிரிவினரால் பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை வாழைச்சேனை, மருதநகர் கிராமத்தில் கோவிட் உறுதி செய்யப்பட்ட நிலையில் அக்கிராமம் முடக்கப்பட்டு காணப்படுகின்றது. இதனுடன் தொடர்புபட்டவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு, தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்படி, மருதநகர் கிராமத்தில் கோவிட் தொற்றுக்குள்ளான நபர் கடமையாற்றிய நட்சத்திர உல்லாச விடுதியில் கடமை புரியும் 22 பேருக்கு, இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
இதன்போது நட்சத்திர விடுதியில் கடமையாற்றும் நபர்களின் பி.சீ.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri