சுற்றுலா துறையினை காரணம்காட்டி மதுபானசாலைகளை அமைக்கும் அரசியல்வாதிகள்: சாணக்கியன் குற்றச்சாட்டு
சுற்றுலாத்துறையினை காரணம்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும் வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்களினால் இன்று (17.07.2023) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் (16.07.2023) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடியினால் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர். இந்த நிலையில் மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மிகமோசமானதாக மாறியிருக்கின்றது.
பொய்யான காரணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு மதுபானசாலைகளை திறப்பதற்கு மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கவேண்டும் என்ற பொய்யான விடயத்தினை வைத்துக்கொண்டு புதிதாக மதுபானசாலைகளை திறப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் சிலர் முன்னெடுப்பது என்பது கவலையான விடயம்.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவானது உண்மையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் அதிக தொகையினைக்கொண்ட பிரதேசமாகும்.
இந்த பிரதேசத்தில் மட்டும் மூன்று புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது. அப்பகுதியில் உள்ள மக்களை இன்னும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
மக்களை ஏமாற்றும் நடவடிக்கை
மாவட்டத்தில் பொருளாதாரத்தினை அழித்துக்கொண்டு வெறுமனே அபிவிருத்தி என்னும் பெயரில் வெறும் இரண்டு வீதிகளுக்கு கல்லையும் மண்ணையும் கொட்டி மக்களை ஏமாற்றுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை சுற்றுலாத்துறையில் அபிவிருத்திசெய்வது என்றால் பல விடயங்கள் இருக்கின்றது செய்வதற்கு. நாங்கள் அதனை பாராளுமன்றத்தில் பல தடவைகள் கூறியிருக்கின்றோம்.
ஆனால் அதனை எதனையும் செய்யாமல் மதுபானசாலைகளை கொண்டுவருவதன் மூலம்தான் சுற்றுலாபயணிகள் அதிகரிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளதுமுடியாது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
